இராமநாதபுரம், ஜூன் 14- இராமநாதபுரம் மாவட்டம் கீழக் கரை நகர் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட பலர் கீழக்கரை தாலுகா அரசு மருத் துவமனைக்கு சென்றுள்ளனர். காய்ச்சல் உள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என நோயாளிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இரண்டு நாட்கள் கழித்துப் பார்ப்போம். மாத்திரை சாப்பிடுங்கள் எனக்கூறி அனுப்பி விட் டுள்ளனர். மாவட்ட ஆட்சியரும், சுகா தாரத்துறையும் காய்ச்சல் பாதிப்புள்ள வர்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழக்கரை தாலுகா செயலாளர் ஆர்.மகா லிங்கம் வலியுறுத்தியுள்ளார்.