tamilnadu

img

தேர்தலில் சிஐடியு ஆட்டோ ஊழியர் சங்க நிர்வாகிகள் வெற்றி

பெரம்பலூர், ஜன.4- உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிஐடியு ஆட்டோ ஊழியர் சங்க நிர்வாகிகள் 3 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்க ளுக்கான பாராட்டு விழா பெரம்பலூர் துறைமங்க லத்திலுள்ள சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. ஆட்டோ ஊழியர் சங்க மாநிலக்குழு சி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரெங்க நாதன் முன்னிலை வகித்து  வரவேற்றார்.  மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின், பி.துரைசாமி, எ.கலையரசி, ஆர்.சிற்றம் பலம் ஆகியோர் எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் 3 வது வார்டு பி.பெரியசாமி, கார் சின்னத்திலும், வாலி கண்டபுரம், 9 வார்டு எஸ். சையது உசேன், கட்டில் சின்னத்திலும், செங்குணம் 6 வது வார்டு பி.அஞ்சலை கட்டில் சின்னத்திலும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு அணிவித்து பாராட்டு விழா நடைபெற்றது. சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் மற்றும் பி.முத்துசாமி, பி. கிருஷ்ணசாமி உள்பட ஆட்டோ சங்க நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வர்கள் வாக்குகளுக்கு பணம் கொடுக்காமலும், நேர்மை யான முறையில் வாக்குகள் சேகரித்து வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.