சென்னை, ஜன.10- 1028 கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறி விப்பில், 505 தொடக்க பால் உற்பத்தி சங்கங்கள் உள்பட 1028 சங்கங்களில் தேர்தல் நடைபெற இருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 368 நிர்வாகக் குழு உறுப்பினர் இடங்களில் 3102 இடங்கள் பெண்களுக்கும், 2068 இடங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. போட்டியிருப்பின் பிப்ரவரி 3 ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. தலைவர், துணைத் தலைவர் இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.