tamilnadu

img

மண்புழுவுக்கு விளக்கம் சொன்ன பரிதாப பழனிசாமி

புதுக்கோட்டை, ஏப்.1-


திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமையன்று வாக்குகள் சேகரித்தார். தொடர்ந்து மாலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் முதல்வர் வாக்கு சேகரித்தார். இதற்காக புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் ஆட்கள் வரவழைக்கப் பட்டிருந்தனர். “நான் ஆள் இல்லாத இடத்தில் பேசுவதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். நீங்கள் கொடுக்கும் கரவொலி ஸ்டாலின் காதுகளை கிழிக்க வேண்டும்” என அடித் தொண்டையில் இருந்து சத்தமாகப் பேசிப் பார்த்தார். வாகனத்துக்கு அருகில் நின்றிருந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தேமே என நின்று கொண்டிருந்தனர்.“பதவியைப் பெறுவதற்காக சசிகலாவிடம் மண்புழு போல ஊர்ந்து சென்று சசிகலாவின் காலில் விழுந்தவர்தான் எடப்பாடி”, என்ற மு.க.ஸ்டா லினின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, “மண்புழு விவசாயிகளின் நண்பன். அது விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுகிறது. நான் ஒரு விவசாயி என்பதால் மண்புழு என்பது ஸ்டா லினுக்குப் புரியாது” என்று காமெடி கட்டினார்.


‘நான் கிளை செயலாளராக இருந்து படிப்படியாக கட்சியில் முன்னேறி தற்பொழுது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல்வராக இருக்கிறேன்’’ என்றதும், இவர் முதலமை ச்சர் ஆவதற்கா நாம ஒட்டுப்போட் டோம்; அம்மாவுக்குத் தானே ஓட்டுப் போட்டோம் என அங்கு கூடியிருந்த அவரது கட்சியினரே புலம்பியதைக் கேட்க முடிந்தது. கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டமக்கள் இரண்டு மாதம் வரை மின்சா ரம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மூன்றே நாளில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாக எடப்பாடி கூறியது அங்கு கூடியிருந்தவர்களை எரிச்ச லடையவே செய்தது. இதற்கெல்லாம் மேலாக, திருச்சிதொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை யில் பிரச்சாரம் செய்த அவர் கரூர்தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரையை அருகில் வைத்துக் கொண்டுபிரச்சாரம் செய்தார்; இவர்களுக்குப்பின்னால் திருச்சி தொகுதி தேமு திக வேட்பாளர் இளங்கோவன் பரிதாப மாக நின்று கொண்டு இருந்தார். வாக்கு கேட்கும் போதும் இரட்டை இலையை முதன்மைப்படுத்தியே எடப்பாடிபேசினார். இதனால், புதுக்கோட்டைத் தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட வாக்காளர்கள் தாங்கள் எந்தச் சின்னத்தில் வாக்களிப்பது என்ற குழப்பத்துடனே சென்றனர். முதல்வரின் இத்தகைய பிரச்சாரம் தேமுதிகவினரை அதிர்ச்சியடையச் செய்தது.