tamilnadu

img

குழந்தைகள் தின விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் கல்லாங்குத்து அரசு தொடக்கப் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஓவியம், விளையாட்டு, கதை சொல்லுதல், உரியடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் மாற்றம் கல்வி மையம் சார்பில் ஜா.வே. சிவராமன் மற்றும் சிஐடியு நிர்வாகி முரளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வி , மற்றும் வாலிபர் சங்க பன்னீர்செல்வம் சரவணன், கோபால் வீரமணி ரமேஷ் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்குக் பரிசுகளை வழங்கினர். ஆசிரியர்கள் கண்ணகி, ரஸ்னா, சுமதி ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.