tamilnadu

img

புதுச்சேரி: கழிப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்!

புதுச்சேரி அரசு கல்லூரியில் கழிப்பறையின் மேற்கூறை இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு கலை கல்லூரியில் கழிப்பறையின் மேற்கூறை, ஹேமலதா என்ற மாணவி மீது இடிந்து விழுந்ததில், ஆபத்தான நிலையில் மாணவி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் விரையில் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.