பெரம்பலூர், ஜூலை 23- 100 நாள் வேலை வழங்கிடக் கோரி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ் வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடு பட்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார கிராமப் புறங்களில் கூலித் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடைபெற்றது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க கிளை செயலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாதர் சங்க நிர்வாகிகள் மாரி யம்மாள், செல்வராணி, செல்லம், நட் சத்திரம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட செயலர் பி.ரமேஷ், மாதர் சங்க மாவட்ட துணைச் செயலர் ஆர்.கலையரசி ஆகியோர் கோரிக்கை யை வலியுறுத்தி பேசினர். தொழிலா ளர்களின் மனுவை வாங்க அலுவலர் கள் யாரும் வராததால் அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதியளித்த தையடுத்து முற்றுகைப் போராட்டத் தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.