tamilnadu

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இருவர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர், செப்.9- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலை மையில் திங்கள்கிழமை நடை பெற்றது. கூட்டத்தின் போது பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமம், காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த பிச்சைபிள்ளை(65), தனது குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற் சித்தார். அப்போது, அங்கு பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவ லர்கள் பிச்சைபிள்ளையை மீட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணை யில், பெரம்பலூர் அருகேயுள்ள கீழக் கரை பகுதியில் சொந்தமான விவ சாய நிலம் 3 ஏக்கர் உள்ளதாம்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
இவரது நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் ஒரு வர் கடந்த சில மாதங்களாக பிச்சைப் பிள்ளை வயலுக்கு செல்லும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, பாதை விட மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தனது நிலத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தனது நிலத்துக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரக் கோரி மனு அளித்துள் ளார்.  இந்த கோரிக்கை மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், மன வேதனையடைந்த பிச்சைபிள்ளை, அவரது மனைவி ராஜ குமாரி, மகன் கண்ணன், மருமகள் மாரி யாயி, மகள் மகேஸ்வரி ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.  இதன் பின்னர், அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
6 ஏக்கர் நிலம் அபகரிப்பு
இதே போல, வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்னும் அப்துல் அஜீஸ்(38) ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயற்சித்தார். இவ ரிடம் விசாரித்த போது, அவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை வேறொரு நபர் பெயருக்கு பட்டா மாற் றம் செய்து அபகரித்துக் கொண்டாராம்.  இதுகுறித்து வேப்பந்தட்டை வட் டாட்சியர், மங்கலமேடு காவல்துறை யினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரி டம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் விரக்தி யடைந்த அஜீஸ் தனது மகள் ஜெனிபர் (12), முகமது ரபீக்(7) ஆகியோருடன், ஆட்சியர் அலுவலகம் எதிரே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கி ருந்த காவலர்கள், அவர்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முத லுதவி சிகிச்சை அளித்தனர்.  அப்துல் அஜீஸ், கடந்த 2 மாதங்க ளுக்கு முன் இதே கோரிக்கையை வலி யுறுத்தி பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அடுத்தடுத்து, நிலப்பிரச்னை சம்பந்த மாக இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், மாவட்ட ஆட்சியரகத் தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.