பாட்னா:
பீகார் மாநில மழைவெள்ளப் பாதிப் புக்கு, முதல்வர் நிதிஷ்குமார்தான் காரணம் என்று பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சித்திருந்தார்.இதற்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
“பாட்னா வெள்ளத்திற்கு, பாஜக-வேகாரணம். பாட்னா மேயர் பதவி, அந்த நகருக்குள் அடங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் எனஅனைத்துப் பதவியையும் பாஜக-வே நீண்டகாலமாக வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பீகார் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவியையும் பாஜக-வேவகித்து வருகிறது. எனவே, பாட்னா மழைவெள்ளப் பாதிப்புக்கு பாஜக-வே பொறுப் பேற்க வேண்டும்” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூறியுள்ளது.மேலும், “பாஜக தலைவர் கிரிராஜ் சிங்,முதல்வர் நிதிஷ்குமாரின் கால்தூசுக்குக் கூட சமமாக மாட்டார்; சிவனின் பெயரைஉச்சரித்தால் மட்டுமே ஒருவர் தலைவராகிவிட முடியாது” என்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கடுமையாக சாடியுள்ளது.