tamilnadu

img

கேரள அரசு நடத்திய ஓணம் வாரக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா

கேரள அரசு நடத்திய ஓணம் வாரக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா திங்களன்று (செப்.16) திருவனந்தபுரத்தில் நடந்தது. அதையொட்டி நடந்த கலாச்சார பேரணியில் புரக்களி, வேலைக்களி, கேரள நடனம், மோகினியாட்டம், அலாமிகளி, ஒப்பனை, மார்க்கம்களி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ,கருடன் வரவு, அர்ஜுன நடனம், ஆப்பிரிக்கன் நடனம், பரிட்ச முட்டுகளி உள்ளிட்ட 24 கலை வடிவங்கள் இடம்பெற்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், மத்திய துணை அமைச்சர் பிரஹலாத்சிங் பட்டேல், பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.