tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் பேரணி

தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி வியாழனன்று (பிப்.20) சென்னை சைதாப்பேட்டையில் ஊர்வலம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழங்கினர்.