tamilnadu

img

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்தது

மேட்டூர்,டிச.25- மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால், 120 அடி நீர்மட்டம்  கொண்ட மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. தொடர்ந்து 43 நாட்களாக முழு நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையில், புதனன்று 118.79 அடியாக குறைந்துள்ளது.  அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதலாக திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,881 கனஅடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும்  அணையில் தற்போது 91.55 டிஎம்சி  நீர் இருப்பு உள்ளது.