tamilnadu

img

அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்

சென்னையில் மு. க. ஸ்டாலின் பேட்டி

சென்னை, டிச. 14- சென்னை: அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் தேர்தலை நடத்தத் துடிக்கும் அதிமுக அர சுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயா ராக உள்ளனர் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்  தெரி வித்தார். தமிழக உள்ளாட்சித் தேர்தல்  தொடர்பான வழக்கில், திமுக வுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில்,  திமுக தலை வர் ஸ்டாலின் சனிக்கிழமை (டிச.14) சென்னையில் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில்,   உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக  தான். திமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதி மன்றம் பாராட்டவே செய்தது என்றார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை யில்  அள்ளித் தெளித்த அவசர கோலத்தில்  உள்ளாட்சித் தேர்  தலை நடத்தத் துடிக்கும் அதிமுக  அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள்  தயாராக உள்ளனர்.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர் வுள்ளவர்களை திமுக வேட்பா ளர்களாகக் களமிறக்க வேண்டும்  என்று கூறினார். தோழமைக் கட்சி யினருடன் ஏற்கனவே தொடங்  கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை யினை தொடர்ந்து மேற்கொண்டு,  சுமுகமான உடன்பாடு கண்டிட  வேண்டும் எனக் கேட்டுக்கொண் டுள்ளார்.

திமுகவினர் போட்டியிடக் கூடிய இடங்களில், மக்கள் நல னில் மிகுந்த அக்கறையும் -  மேலான வெற்றிவாய்ப்பும் உள்ள, அர்ப்பணிப்பு உணர்வு  நிறைந்திருக்கும் வேட்பாளர்க ளைக் களமிறக்கிட வேண்டும்.தொண்டர்களையும் அரவ ணைத்து, தோழமைக் கட்சியினரை  ஒருங்கிணைத்து, ஒவ்வொரு வாக்காளரின் உறுதியான நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் கண்ணும் கருத்துமாக உழைத்திட்டால்தான், வெற்றி நம்  கைகளுக்கு வரும் என்று தனது  கட்சியினரைக் கேட்டுக்கொண் டுள்ளார். அலட்சியம் துளியு மின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம்  வெற்றியின் இலக்கை அடைந்திட  முடியும். சூது மதியாளர்களாம் அதி கார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர் களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்  களுக்கு ஏற்படும். என்றும் நாம்  மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேக மும் நிறைந்த பணியை விரைந் தாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.