சென்னை, ஜூலை 30- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட லோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் கார ணமாக அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களில் லேசான மழைக்கு வாய்ப்பி ருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்ப ரம், பரங்கிப்பேட்டை, நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் தலா 4 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.