சென்னை,டிச.28- இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தில்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் இதற்காக அவர்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.