சென்னை ஏப்.9- தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக தற்போது வரை, ஒரு லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்களை கைது செய்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நட வடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் மட்டும் புதனன்று (ஏப்.8) ஒரே நாளில் 840 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 472 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே போல் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 833 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 87 ஆயிரத்து 577 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 13 ஆயி ரத்து 117 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், 32 லட்சத்து 83 ஆயிரத்து 844 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.