tamilnadu

img

அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்திடுக டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை, ஜூலை 11 - அனைத்து டாஸ்மாக் ஊழியர்க ளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியு றுத்தி குன்னூரில் டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் மாலை நேரத்தில் வன விலங்குகள் தொல்லை மற்றும் போக்குவரத்து வசதி குறைபாடு காரணத்தினால் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடை யின் பணிநேரத்தை குறைத்திட வேண்டும்

. மே 7ஆம் தேதியன்று ஊரடங்கிற்கு பின் மீண்டும் டாஸ் மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, கடைகளில் ஒலிப்பெருக்கிகள், தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற கடை ஊழியர்கள் செய்த செலவிற்கான தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு டாஸ் மாக் ஊழியர் சங்கத்தினர் குன்னூ ரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ் மாக் ஊழியர் சம்மேளன மாநில துணைத்தலைவர் ஜெ.ஆல்தொரை தலைமை வகித்தார். இதில், சம்மே ளனக்குழு உறுப்பினர் ஏ.நவீன் சந்திரன், மாவட்டச் செயலாளர் மகேஷ், பொருளாளர் தியாகரா ஜன், டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரங்கசாமி, செய லாளர் விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.