உதகை, ஜூலை 30- உதகை - கூடலூர் சாலையில் அமைந் துள்ள நடுவட்டம் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்ச மடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை - கூடலூர் சாலையில் அமைந்துள்ள நடுவட்டம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதிக்கு 50 அடி கீழ்வாக்கில் பழைய பேருந்து நிலை யம் அகற்றப்பட்டு, புதிய பேருந்து நிலை யத்திற்கான கட்டுமானப் பணிகள் நடை பெற்று வருகிறது. இக்கட்டுமானப் பணிக் காக எந்த ஒரு தடுப்புச் சுவரும் அமைக்கா மல் மண் தோண்டுப்பட்டு வருவதாக கூறப் படுகிறது. இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், புதனன்று மாலை பெய்த மழையால் மேல்புறத்தில் வசிக்கும் ஈஸ்வர மூர்த்தி என்பவரது வீட்டின் முன்பு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், மழைக் காலத்திற்கு முன்பாக தடுப்புச் சுவர்கள் எழுப்பி இருந்தால் தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு இருக்காது என்றும், மண் அரிப் பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.