புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டிலேயே 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரியும் வியாழனன்று (ஆக.13) சோத்துப்பாக்கம் கூட்டு சாலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சித்தா மூர் ஒன்றிய செயலாளர் பாக.சத்யா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்த மன், துணை செயலாளர் ச.ஜீவானந்தம், மாவட்ட குழு உறுப்பினர் குலவிக்கு, செந்தமிழன் உள்ளிட்டோர் பேசினர்.