tamilnadu

img

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது...

தில்லி 
உலகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் தான் போகிற போக்கில் பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்துவதா? பாதித்தவர்களைக் குணப்படுத்துவதா? ஊரடங்கில் தவிக்கும் மக்களின் பசியைக் கவனிப்பதா? வெளிநாட்டில் உள்ள சொந்த நாட்டு மக்களை அழைத்து வருவதா? என பல்வேறு சிக்கலில் உலக நாடுகள் தவிக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை மின்னல் வேகத்தில் செல்கிறது. பலி எண்ணிக்கை மற்றும் பாதிப்பு என இரண்டிலும் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன.  

தினமும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலக சுகாதார நிறுவனம் என்ன செய்வது என்பது புரியாமல் கலங்கி நிற்கும் நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 91 ஆயிரத்து 84 ஆக உள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா நோயாளிகள் பலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 50 ஆயிரம் பேர் கொரோனாவிற்கு இரையாகியுள்ளனர்.