tamilnadu

img

கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்கிறது யுனிசெப்

நியூயார்க்:
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், ஒவ்வொரு ஆண்டும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் போலியோ சொட்டு மருந்து போன்ற தடுப்பு மருந்துகளை வாங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25-க்கு மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நாடுகளிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சப்ளை செய்யும் மிகப்பெரிய பணியை யுனிசெப் முன்னின்று மேற்கொள்ள இருப்பதாக அதன் செயல் இயக்குநர் ஹென்ரீட்டா போரே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு, பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு, கவி நிறுவனம், உலகவங்கி, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை பங்குதாரர்களாக கொண்டு அவற்றின் உதவியுடன் தடுப்பூசிகளை வாங்கி வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், 28 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை யுனிசெப்புடன் பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.