டிரம்ப் கெஞ்சல்
வாஷிங்டன், ஜூலை 31- அமெரிக்காவில் மக்கள் பாதுகாப்பாக வும், முறையாகவும் வாக்களிக்கும் வகை யில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்க லாம் என்று ஜனாதிபதி டிரம்ப் ஆலோசனை என்ற பெயரில் கெஞ்சலுடன் தெரிவித்துள்ளார். மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று பதவியில் தொடர்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக் கையுடன் கூறிய நிலையில், அமெரிக்கா வில் கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ளதால் அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப், தபால் மூலம் வாக்களிப்பது 2020 தேர்தலை வரலாற்றில் மிக மோசடியான தேர்தலாக மாற்றி விடும் என்றும், அது அமெரிக்காவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் மக்கள் பாதுகாப்பாகவும், முறையாகவும் வாக்களி க்கும் வகையில் தேர்தலை ஒத்தி வைக்க லாம் என்று கூறியுள்ளார்.