நியூயார்க்
உலகை தனது உள்ளங்களில் வைத்து மிரட்டி வரும் கொரோனா எனும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இதில் அதிக பாதிக்கப்பட்டது அமெரிக்கா, பிரேசில் தான்.
இந்தியா, ரஷ்யா நாடுகளில் கொரோனா வைரஸ் நடந்து சென்று பரவுகிறது என்றால் அமெரிக்கா மற்றும் பிரேசிலில் கொரோனா வைரஸ் பறந்து சென்று பரவுகிறது. இதனால் அங்கு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு ஏற்றம், இறக்கமாக உள்ளது. கடந்த ஜூன் முதல் வாரத்தில் அங்கு கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. அதாவது தினசரி பாதிப்பு 25 ஆயிரத்துக்குள் இருந்தது. இதனால் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை கொரோனா கையிலெடுத்தது.
கடந்த 4 நாட்களாக அங்கு கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31 ஆயிரத்து 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 28 லட்சத்து 82 ஆயிரத்து 153 அக்கா உயர்ந்துள்ளது. மேலும் 363 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 22 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாக 10 லட்சத்து 3 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.