நியூயார்க்
உலகைத் தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டியெடுத்து வருகிறது. பாதிப்பு, பலி எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திணறி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 2,065 பேர் பலியானார்கள்.
இதன் மூலம் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. தற்போது 9 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மொத்த பலி எண்ணிக்கை 54 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக இன்னும் அதிகமான நபர்கள் அதாவது கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனை சென்று வந்துள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் கொரோனவை கட்டுப்படுத்திவிட்டாலே அமெரிக்காவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை சற்று குறையும். ஆனால் அந்நாட்டு அரசு சீனா மற்றும் ஈரான் நாடுகளிடம் எப்படி மோதல் போக்கை உருவாக்கலாம் எனக் கணக்குப் போட்டு வந்தால் எப்படி கொரோனவை விரட்டுவது.