tamilnadu

img

அமெரிக்காவில் மேலும் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு....

நியூயார்க் 
உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது. அங்கு கடும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் உச்சத்தில் தான் உள்ளது. தினமும் பரவல் மற்றும் பலி எண்ணிக்கை தாறுமாறாக உயர்வதால் அந்நாட்டு அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9  லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக நியூயார்க் நகரில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் ஒரே நாளில் 1,900 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஆறுதல் செய்தியாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனவை சமாளித்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஒரு வாரக் காலமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சராசரியாக 25 ஆயிரத்துக்குள் இருக்கும். ஆனால் நேற்று ஒரே நாளில் 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.