புதுதில்லி:
இந்தியா என்றுமே ஈரானின் சிறந்த நண்பன்தான்; அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி கூறியுள்ளார்.இந்தியா - ஈரான் கலாச் சார விழா, தில்லியில் நடைபெற்ற நிலையில், அதில் அலிசெகேனி இவ்வாறு பேசியுள்ளார்.
“அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்காகவே, இந்தியா, ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இதனால் இந்தியா - ஈரான் உறவுபாதிக்கப்படும் என்று நாங் கள் நினைக்கவில்லை. இந் தியா என்றுமே ஈரானின் நண்பன் தான்” என்று செகேனி கூறியுள்ளார்.“அமெரிக்காவால், ஈரான்- இந்தியா இடையேயான இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இந்தியாவிடமிருந்து ஈரானுக்கு எதிராக எந்தவித சமிக்கையும் வரவில்லை. இந்த இரு நாடுகளுக்கு இடையே இறக்குமதி நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரான் மீது இந்தியாவில் எதிர்மறையான எதுவும்
இல்லை என்பது முக்கியமானது” என்று தெரிவித்துள்ள செகேனி, “இந்தியா - ஈரான் இடையிலான எண்ணெய் பிரச்சனை, இந்த இரு நாடுகளின் உறவை என்றுமேபாதிக்காது” என்று நம் பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்களால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியும். அதோடு இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி பாதுகாப்பைத் தரமுடியும்” என்றும் குறிப்பிட் டுள்ளார்.