tamilnadu

மத்திய அரசின் இந்தி திணிப்பை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

புதுச்சேரி, ஆக. 2- புதிய கல்வி திட்டம் ஏற்புடையதாக இல்லை. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும்  புதுச்  சேரியில் முழு பொதுமுடக்கம் கிடையாது. இந்நிலையில் புதுச்சேரி நகரத்தின் பல பகுதிகளுக்கு முதல்வர் நாராயணசாமி சென்று ஆய்வு மேற்கொண்டார். பழைய  பேருந்து நிலையத்தில் உள்ள உழவர்  சந்தைக்கு சென்று அங்குள்ள வியாபாரிகளி டம் தனிமனித இடைவெளியை கடை பிடித்து பொருட்களை விற்குமாறு கேட்டுக்  கொண்டார். அதேபோல் பொதுமக்களிடம் முறையாக முகக் கவசம் அணிந்து பொருட்  களை வாங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.  அதைத்தொடர்ந்து மரப்பாலம் வழியாக அரியாங்குப்பம்  சென்று கடலூர் மெயின் ரோடு சிக்னலில் உள்ள  ஆட்டோ நிறுத்  தத்திற்கு சென்று ஓட்டுநர்களிடம் கொரோனா  தொற்று காலத்தில் சவாரி கிடைக்கிறதா?  இடைவெளியுடன் பொதுமக்கள் ஏறிச் செல்கிறீர்களா? என்று கேட்டறிந்தார்.  

மேட்டுப்பாளையத்தில் உள்ள தற்காலிக மீன் மார்க்கெட், தட்டாஞ்சாவடி கமிட்டியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், முத்தி யால்பேட்டை மார்க்கெட் மற்றும்  செஞ்சி சாலையில் உள்ள தற்காலிகக் கடைகளை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் வெளி யிட்டுள்ள வீடியோ பதிவில், மத்திய அரசின்  வழிகாட்டுதலின்படி  புதுச்சேரியில் இனி  கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் வீடு  மட்டும் தனிமைப்படுத்தப்படும். தேவைப்  படுவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  பல மாநிலங்களில் சித்தா மருத்து வத்தில் கொரோனா நோயாளிகள் குண மடைவதால் புதுச்சேரியிலும் கொரோனா நோயாளிகளுக்கு சித்தா முறையிலும் சிகிச்சை அளிக்க மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரி யில் மிக பெரிய மாற்றம் ஏற்படாது. மும்மொழி  கட்டாய திட்டம் ஏற்புடையதல்ல. சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு  முயற்சிக்கிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம்  என்றும் முதல்வர் நாராயணசாமி கூறினார்.