திஸ்பூர்:
அசாம் மாநில பாஜக அமைச்சர் ஒருவர், மக்களின் போராட்டம் காரணமாக, 5 கி.மீ.தூரம்கூட சாலையில் பயணிக்க முடியாமல், ஹெலிகாப்டரில் ஏறித் தப்பியுள்ளார்.பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர்கள், மக்களைக் கண்டு ஓடி ஒளியும் அளவிற்கு போராட்டம் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், அந்த கட்சியின் எம்.எல்.ஏ. ராஜன் போர்தாக்கூர் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பாஜக அமைச்சர்களால் செல்ல முடியவில்லை.இதனிடையே, ராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அசாம் மாநிலநிதியமைச்சர் ஹிமாந்த பிஸ்வாசர்மா சென்றபோது, திஸ்பூர் - கோராமாரி தேசியநெடுஞ்சாலையில் அசாம் மாணவர் அமைப்பினரின் சாலை மறியலில் மாட்டிக்கொண்டார். இதனால், அவர்களிடம் தப்பி, வெறும் 5 கி.மீ. தூரத்துக்காக ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டிய நிலைக்கு ஹிமாந்த பிஸ்வாசர்மா தள்ளப்பட்டார். அப்படியும் போராட்டக்காரர்கள் விடவில்லை. எம்எல்ஏ-வின் உடலுக்கு பிஸ்வா சர்மா அஞ்சலி செலுத்தச் சென்ற போதும் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, விரட்டியடித்துள்ளனர்.