tamilnadu

img

தில்லியில் இன்று வாக்குப்பதிவு

தலைநகர் தில்லியில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (பிப். 8) காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தில்லியில் 762 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். 1.47 கோடி போ் வாக்களிக்கத் தகுதியானவா்கள். 13,750 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை முதல் பொதுமக்கள்  ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 10 மணி நிலவரப்படி 4.33 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.