புதுதில்லி:
மாட்டிறைச்சி உண்டதே தீண்டாமை உருவாகக் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கிருஷ்ண கோபால் கூறியுள்ளார்.ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் கிருஷ்ண கோபால், ‘பாரத் கா ரஜ்னிதிக் உத்தரராயன்’ மற்றும் ‘பாரத் கா தலித் விமர்ஷ்’ ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போதுதான், “இந்தியா வின் முதல் தீண்டத்தகாதவர்கள் யார் என்றால், அது மாட்டு இறைச்சியை உண்டவர்கள்தான்” என்று கூறியுள்ளார். மேலும், “நாளாக நாளாக, இந்த விஷயம்மக்கள் மனதில் ஊடுருவத் தொடங்கி, ஒரு மிகப்பெரிய சமூகமே தீண்டத் தகாதவர்கள் என முத்திரை குத்தப்பட்டது; பின்னர் அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்” என்றும் வரலாற்றை கூறுவது போல விளக்கியுள்ளார்.“இந்தியாவில் தோன்றிய எந்தவொரு மதத்திலும் தீண்டாமை என்ற விஷயம் இல்லை என்றும்; இஸ்லாமிய மன்னர்களின் வரு கையே தீண்டாமைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது” என்றும் புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார். மேலும், இராமாயணத்தை எழுதிய வால்மீகி தலித் அல்ல, உண்மையில் அவர் ஒரு சூத்திரர் என்று கூறியுள்ள கிருஷ்ண கோபால், “பெரும்பாலான ரிஷிகள் சூத்திரர்கள்தான்” என்றும் “எனினும் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.வேதகாலத்தில் பிராம ணர்களும் மாட்டிறைச்சி உண்டவர்கள்தான் என்பதை பலரும்ஆதாரங்களுடன் நிரூபித்துள்ள னர். இளம் பசுங்கன்றின் கறியைஉண்ணாதவர் நல்ல பிராமணராக இருக்க முடியாது என்று வேதங்களிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி உள்ளனர். எனினும் அதையெல்லாம் மறந்துவிட்டு, மாட்டிறைச்சிதான் தீண்டாமைக்கு காரணம் என்று கிருஷ்ண கோபால் பேசியுள்ளார்.