பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமையன்று நண்பகல் 11.45 முதல் 12.00 மணி வரை, திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி, செயற்கைக் கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக கூறினார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தேர்தல் ஆதாயத்திற்காக திட்டமிட்டே மோடி இந்த உரையை நிகழ்த்தியிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதையடுத்து, மோடியின் உரை குறித்து விசாரணை நடத்துவதாக கூறிய தேர்தல் ஆணையம், ‘சக்தி மிஷன்’ உரைக்கு மோடி தரப்பில் அனுமதி எதுவும் பெறவில்லை என்பதை மட்டும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது. எனினும் இதுதொடர்பாக உள் ஆய்வு நடத்தப்படும் என்று கூறியது. இந்நிலையில், “சக்தி மிஷன் குறித்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் விதிமீறல் இல்லை” என்று வழக்கம்போல மோடிக்கு சாதகமாகவே ‘தீர்ப்பு’ வழங்கியுள்ளது.