நதேழ்தா குரூப்ஸ்கயா பிறந்த நாள்
ரஷ்யப் புரட்சியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளருமான நதேழ்தா குரூப்ஸ்கயா, சோவியத் ஒன்றியத்தில் 1929 முதல் 1939 இல் இறக்கும் வரை துணைக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். ரஷ்யப் புரட்சியின் மகத்தான தலைவர் விளாடிமிர் லெனின், குரூப்ஸ்கயாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். குரூப்ஸ்கயா, லெனினுக்கு ரஷ்யப் புரட்சியில் உறுதுணையாகவும் திகழ்ந்தார்.
1903 லிருந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் போல்ஷ்விக் பிரிவின் செயலாளராகவும் 1905 ஆம் ஆண்டு போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராகவும் இருந்தார். 1917 அக்டோபர் புரட்சியின் பிறகு, அவர் வயது வந்தோர் கல்விப் பிரிவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1920ல் கல்விக்குழுவின் தலைவர் மற்றும் 1929 முதல் 1939 வரை அரசாங்க அமைச்சர் பதவியை வகித்தார். குரூப்ஸ்கயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக்களுக்குக் கல்வி போதித்தார். புரட்சிக்கு பின் கம்சமோல் என்று அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தையும் வழி நடத்தியவர்.
பெரணமல்லூர் சேகரன்