புதுச்சேரி, மார்ச் 4- தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் புதிய விவரங்கள் கேட்பதை மத்தியஅரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் நாராயண சாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியி ருப்பதாவது:- இந்தியாவில் உள்ள அனைத்து மக்களை யும் உள்ளடக்கிய தேசிய மக்கள் தொகை பதிவேடு 2010 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. அந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் நிலை யான முகவரி போன்ற தரவுகளை கொண்ட 119 கோடி இந்தியர்களின் விவரங்களை ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் கணினியில் திரட்டப்பட்டன. எனினும், எதிர்வரும் ஜூன் 2020 மற்றும் ஜூலை 2020 மாதங்களில் புதுச்சேரி மற்றும் அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடு கள் பட்டியலில், பெற்றோர், பிறந்த தேதி, இடம், கடைசியாக இருந்த இடம், கடவுச் சீட்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், ஓட்டுநர் உரிம எண், தாய் மொழி ஆகி யவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகி யவை இணைக்கப்படுவதாக, நாட்டு மக்க ளிடையே பதற்றம் மற்றும் பாதுகாப்பற்றத் தன்மை ஏற்பட்டுள்ளது. தேசிய மக்களை தொகை பதிவேட்டில் பெறப்பட்ட தகவல்க ளின் அடிப்படையில் மதரீதியாக மக்களை பிரித்தாளவும், அவர்களுக்கு குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு சம் பந்தம் இல்லாத ஒன்றாகும். தேசிய மக்கள் தொகை பதிவேடு 2010 ஐ விட கூடுதல் தகவல்களை கோரும் புதிய தேசிய மக்கள் தொகை பதிவேடு 2020 பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விவரங்கள் தானாக முன் வந்து வழங்க வேண்டியவையே தவிர, இதற்கென ஆதாரங்களை தரத் தேவை யில்லை என்று கூறப்பட்டாலும், இவ்விவ ரங்கள் விண்ணப்பத்தில் இடம் பெற்றி ருப்பது அச்சத்தையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. எனவே, புதிய விவரங்களை உள்ள டக்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகளின் பட்டியலை தவிர்த்து, முன்பு 2010 ஆம் ஆண்டில் கேட்கப்பட்ட விவரங் களை மட்டும் கொண்டு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் பட்டியலை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் 2019ல் புதிதாக சேர்க்கப் பட்ட விவரங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.