உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மணிசங்கர் அய்யர், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தீர்மானம்
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் ஜம்மு - காஷ்மீரில் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மற்றும் அப்பாவி மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டாக தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தினர்.அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாகிய நாங்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.ஜம்மு-காஷ்மீர் மக்களையோ, அங்குள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ கலந்து ஆலோசிக்கா மல், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியிருப்பதன் விளைவாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களாகிய நாங்கள், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்குத் துணை நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் தொடர்புகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலை வர்கள், கல்வியாளர்கள், குடிமைச் சமூகத்தின்உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கைது செய்து தொடர்ந்து வீட்டுச் சிறையில் மத்திய அரசு வைத்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.ஆகவே, வீட்டுச் சிறையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அப்பாவி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
மக்களின் பேச்சுரிமையைப் பறித்தும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்தும் மத்திய அரசு எடுத்துள்ள கடும் நடவடிக்கைகள், அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால்- அந்த நடவடிக்கை களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலைமை திரும்புவதற்கும், அம்மாநில மக்கள் தங்களின் உற்றார் உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகள் மீண்டும் அளிக்கப்படவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.