tamilnadu

img

கருட் கங்கா ஆற்றின் கற்கள் பாம்பு விஷத்தை முறிக்குமாம்!

புதுதில்லி:
வாத்துக்கள் நீச்சலடிப்பதால், தண்ணீரில் ஆக்சிஜனின் அளவு அதிகரிக்கும், பசுவின் சிறுநீரை (கோமூத்ரா) குடித்தால், கேன்சர் குணமாகும் என்று எதையாவது உளறிக் கொட்டுவது பாஜகவினரின் வாடிக்கை. அந்த வகையில், ‘பாம்பு கடித்த இடத்தில், கங்கை ஆற்றுக்கல்லை வைத்துத் தேய்த்தால், கொடிய விஷமாக இருந்தாலும் முறிந்து போகும்’ என்று புதிய கதை ஒன்றை உத்தர்கண்ட் மாநிலபாஜக தலைவரான அஜய் பட்என்பவர் அவிழ்த்து விட்டுள்ளார்.அதுவும் இந்திய நாடாளுமன்றத் தில்.மக்களவை உறுப்பினராக இருக்கும் அஜய் பட், இதுதொடர்பாக மக்களவையில் பேசியிருப்பதாவது:

உத்தர்கண்ட் மாநிலத்தில் பாயும் கருட்கங்கா கங்கா ஆற்றின்மருத்துவக் குணங்கள் குறித்துவெகுசிலரே அறிந்து வைத்துள்ளனர். இந்த ஆற்றிலுள்ள கல்லைஎடுத்து, பாம்பு கடித்தஇடத்தில்தேய்த்தால் உயிர் பிழைத்துவிட முடியும். ஏனென்றால், இந்த ஆற்றின் கற்கள் பாம்புகளுக்கு சுத்தமாக ஆகாது. அதுமட்டுமல்ல, இந்த புனித ஆற்றின் நீரை ஒருகோப்பை அளவிற்குப் பருகினால், கர்ப்பிணிப் பெண்களுக் கான உடல்நலச் சிக்கல்கள் தீரும்.கருட்கங்கா ஆற்றின் கல்லைஉரசி, அதனை ஆற்றின் தண்ணீரில் கலந்து ஒரு கோப்பை பருகினால், கர்ப்பிணிப் பெண்கள், சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது. இவ்வாறு அஜய் பட் பேசியுள்ளார்.