திஸ்பூர்:
கொரோனா இடர்பாடுகளையொட்டி, மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளை, பல்வேறு மாநில அரசுகள் செய்து வருகின்றன.
ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் பாடத்திட்டக் குறைப்பையே ஒரு சாக்காக வைத்து, பாஜக கொள்கைகளுக்கு எதிரான பிற அரசியல் சிந்தனைகளை, அரசியல்கட்சித் தலைவர்கள் தொடர்பான பாடத்திட்டங்களை திட்டமிட்டு நீக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதில், அசாம் மாநில பாஜக அரசும் தற்போது இணைந் துள்ளது.பாடத்திட்டத்தில் 30 சதவிகித சுமையைக் குறைக்கிறோம் என்று கூறி, அரசியல் அறிவியல் பாடத்தில் ஜவஹர்லால் நேருவின் அரசியல் சிந்தனைகள், அயலுறவு கொள்கை, இட ஒதுக்கீடு தொடர் பான மண்டல் கமிஷன் பரிந்துரை, அயோத்தி,குஜராத் வன்முறைகள், அமெரிக்காவுக்குச் சவாலாக விளங்கிய கம்யூனிஸ்ட் நாடுகள், மாவோவுக்குப் பிந்தைய சீனாவின் வளர்ச்சி, உலகமயமாதல் மற்றும் அதற்கு எதிரான போராட்டங்கள், பெண்களுக்கு அதிகாரம் என ஏராளமான பாடங்களை அசாம் உயர்கல்வித்துறை நீக்கியுள்ளது.சமூகவியல் பாடப்பிரிவில், பெண் களுக்கு சம உரிமை, சிறுபான்மையினர் உரிமைகள், தேசக்கட்டுமானம், பஞ்சாயத்து ராஜ், சமூக மாற்றத்துக்கான சக்திகள், நிலச்சீர்த்திருத்தம், பழங்குடி இயக்கங்கள் பற் றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.மதச்சார்பின்மை, குடும்பம், உறவு, சாதி,காலனியாதிக்கம் குறித்த பாடங்கள் மட்டுமன்றி, உயிரியல் பிரிவில், கதிரியக்கக் கழிவுகள், பசுமை இல்ல வாயு விளைவு, குளோபல் வார்மிங், ஓசோன் ஓட்டை, வனங்களை அழித்தல் ஆகிய பாடங்களையும் கூட அசாம் அரசு விட்டு வைக்கவில்லை.இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் கண்டனங் கள் எழுந்துள்ளன.