புதுதில்லி:
வெளியில் தெரியாத பொருளாதாரச் சிக்கலில் இந்திய நாடு மாட்டிக்கொண்டிருப்பதாக, பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள ரதின் ராய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பொருளாதார வல்லுநரான ரதின் ராய், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:இந்தியா இன்றைக்கு வெளியில் பகிரங்கமாக தெரியாத நிதியாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது. வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையே இந்த பொருளாதாரச் சிக்கலுக்கான முக்கியக் காரணம். ஜிஎஸ்டி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகிய இரண்டும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நடப்பு 2019-20 நிதியாண்டில், வரி வருவாயாக ரூ. 25 லட்சத்து 53 ஆயிரம் கோடி திரட்டுவது என்று மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. என்னுடைய தொழிற்திறன் சார்ந்த கணிப்பின்படி, 2019-20 நிதியாண்டில், திட்டமிட்ட அளவில் வரிவருவாய் ஆதாரத்தை நாம் திரட்டிவிட முடியாது.
எனவே, நாம் அதிகம் கடன்வாங்க வேண்டியதிருக்கும், அல்லது செலவுகளை அதற்கேற்ப குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அதிகம் கடன்வாங்கினால், அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம், செலவுகளை அதிகமாக குறைத்தாலும் பொருளாதாரத்திற்குப் பாதிப்புதான். மொத்தத்தில் இந்தியா ஒரு வெளியில் தெரியாத பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண் டுள்ளது.இவ்வாறு ரதின் ராய் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கானநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, சுமார் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் கணக் கில் காட்டப்படாத தகவலை கண்டுபிடித்துக் கூறியதும், இதே ரதின் ராய்தான்.“பட்ஜெட்டில் பயன்படுத்தப்படும் திருத்தப் பட்ட மதிப்பீடுகளின்படி, கடந்த 2018 - 19-ஆம் ஆண்டில் இந்திய அரசின் வருவாய் 17.3 லட்சம் கோடி என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள் ளது. ஆனால், பொருளாதார அறிக்கையில் 15.6 லட்சம் கோடி என்று விவரம் தரப்பட்டுள்ளது. அப்படியானால் 1.7 லட்சம் கோடி எங்கே போனது?” என ரதின் ராய் எழுப்பிய கேள்வி மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.