புதுதில்லி, ஏப்.2- குஜராத்தில், படேல் சமூகத் தலைவரான ஹர்திக் படேல் நடத்திய இடஒதுக்கீட்டு போராட்டத்தில் வெடித்த வன்முறைக்காக, அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தது. இதனால் அவர்தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தன்மீதான தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், தனது மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரியும், ஹர்திக் படேல் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால், ஹர்திக் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.