tamilnadu

img

குடியரசு தின விழா ஒத்திகை

புதுதில்லி, ஜன. 13- தலைநகர் தில்லியில், குடியரசு தின விழாவையொட்டி, முப்படை கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படை களின் வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையை திங்களன்று தொடங்கியுள்ளனர். வருகிற 26ஆம் தேதியன்று, தில்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள ராஜபாதையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண கொடியேற்றி, ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்வார். இந்தாண்டு, இந்திய குடியரசு தின விழாவில், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சானரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இந்நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும், முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், திங்களன்று காலையில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கடும் பனிமூட்டத்திற்கு இடையே, சீருடைகள் அணிந்து வீரர்கள், ராணுவ மிடுக்குடன் அணிவகுத்து, ஒத்திகையில் ஈடுபட்டனர்.