tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு

புதுதில்லி,ஜூன் 14- கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின்  சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகையை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.எனவே கொரோனா அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சோதனை அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.  இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருத்தப்பட்ட நெறிமுறை களை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில், அர்த்தமுள்ள பலன்களை அடைவதற்கு கொடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்கக்கூடாது (இதற்கு முன்பு கொரோனா தீவிர மாக பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை அஜித்ரோமைசின் மாத்திரைகளுடன் சேர்த்து தரலாம் என்று கூறி இருந்த நெறிமுறையை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் திரும்பப்பெற்று ள்ளது,) ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பொறுத்தவரையில், கொரோனா வைரசுக்கு எதிராக ‘இன்விட்ரோ’ செயல்பாட்டை நிரூபித்து க்காட்டி உள்ளது.

பல சிறிய அளவி லான ஒற்றை மைய ஆய்வுகளில் இது பயன் அளிப்பதாக காட்டப்பட்டுள்ளது. ஆனாலும்கூட, கடுமையான வரம்புகளை கொண்ட பல பெரிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பெரிய அளவுக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. குறிப்பாக மரணத்தை தடுப்பதில், அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. எனவே, அதன் பயன்பாட்டுக்கு பின்னால் உள்ள ஆதாரங்கள், மற்ற  மருந்துகளைப்போல மட்டுப்படுத்தப் பட்டவையாக இருக்கின்றன. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு கள் நடத்தப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட நோயாளிகளிடம் கலந்து பேசி முடிவு எடுத்துத்தான் வழங்க வேண்டும். பிற வைரஸ் தடுப்பு மருந்துகளைப் போலவே இந்த மருந்தைகயும் நோயின் போக்கில் ஆரம்பத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால் அர்த்தமுள்ள பலன் கிடைக்கலாம். ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரைப்பதற்கு முன்பாக நோயாளிக்கு இ.சி.ஜி. பரிசோதனை ஒன்றை செய்து பார்த்து விடுவது நல்லது.

அவசர கால பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ பரிந்துரைக்கலாம்.

கொரோனா தீவிரம் மிதமாக இருக்கிற நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.