tamilnadu

img

மோடி இந்திய குடிமகன் என்பதற்கு என்ன ஆதாரம்..?

கேரளத்தைச் சேர்ந்தவர் ஆர்டிஐ சட்டத்தில் கேள்வி 

புதுதில்லி, ஜன. 17 - பிரதமர் மோடி, அவரது குடியுரிமை யை நிரூபிப்பதற்கு பிரத்யேகமாக என்ன ஆவணம் வைத்திருக்கிறார்? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேரளத்தைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்ட த்தில் சாலகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷி கல்லுவீட்டில். ஆம் ஆத்மி கட்சி யைச் சேர்ந்த இவர், தனது நகராட்சி அலு வலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி யிடம் ஒரு ‘ஆர்டிஐ’ மனுவை சமர்ப்பித்து ள்ளார். அதில் “பிரதமர் நரேந்திர மோடி இந்தியக் குடியுரிமை உடையவர் தானா?” எனவும் “அதனை நிரூபிக்கும் ஆவணங்கள் அவரிடம் இருக் கின்றனவா?”எனவும் கேட்டிருக்கிறார். இதுதொடர்பாக ஜோஷி கல்லு வீட்டிலிடம் செய்தியாளர்கள் பேட்டி  கண்டுள்ளனர். அப்போது, விளம் பரத்துக்காக இந்த மனுவை அளிக்க வில்லை; பொதுநலம் கருதியே இதனைச் செய்துள்ளதாக ஜோஷி தெரிவித்துள் ளார். “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஆயிரக்கணக்கான மக்களின் கவலை யையே என் கேள்விகள் பிரதிபலிக் கின்றன. 

பாஸ்போர்ட் மற்றும் ஆதார் வைத்திருப்பதுகூட குடியுரிமையை நிரூ பிக்க போதாது என்றால், அதற்குமேல் ஏதாவது பிரத்யேக ஆவணம் பிரதம ரிடம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள் ளார்.  மேலும், “இந்தியர்களாகவே பிறந் திருந்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் காரணமாக, அதிகாரிகளால் தாங்கள் கொடுமைப்படுத்தப்படலாம் என மக்கள் அஞ்சுகின்றனர். பழைய ஆவணங்களைக் காட்டி, குடியுரிமையை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்று மக்கள் கவலைப் படுகின்றனர்.  குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் எனும்போது, அந்தச் சான்றிதழ் இல்லாத 1970-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெரும்பாலா னோருக்கு சிக்கல் ஏற்படும் என கருது கின்றனர்” எனவும் ஜோஷி தெரிவித்துள் ளார். ஜோஷியின் இந்த மனு தற்போது தில்லியில் உள்ள மத்திய பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.