தேர்தல் நடந்தை விதிகள் அமலில் இருக்கும்நிலையில், நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாடிய பிரதமர் மோடி, ‘மிஷன் சக்தி’ சாதனையை நிகழ்த்தி விட்டதாக பெருமை பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘மோடியின் உரை பிரதமர் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டதா அல்லது பாதுகாப்புத்துறை தயாரித்துக் கொடுத்ததா?’ என்பதை உள்ஆய்வு செய்ய இருப்பதாக தேர்தல் ஆணையம் சமாளித்துள்ளது.