புதுதில்லி:
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா, திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசியகுடியுரிமைப் பதிவேட்டுக்கு தனது எதிர்ப்பை வெளிப் படுத்தும் வகையில், பெங்களூரு டவுன்ஹாலில் கோரிக்கை அட்டையுடன் தனியாளாய் களமிறங்கினார். போலீசார் அவரை அராஜகமான முறையில் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் என் றும்; அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையைக் கூட போலீசார் மதிக்கவில்லை என்றும் குஹாகண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ராமச்சந்திர குஹா, “1. என்.ஆர்.சி.யை மத்திய அரசு உடனடியாகதிரும்பப் பெற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மத்தியஅரசு மீது நம்பிக்கை ஏற்படும். நாட்டின் காயமும் தீரும். 2. குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது நெறிகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவுக்கே எதிரானது. அறிவார்ந்த அரசென்றால் இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.