tamilnadu

img

24 அரசு நிறுவனங்களை விற்க மோடி அரசு திட்டம்

புதுதில்லி:
24 அரசு நிறுவனங்களின் சொத்துக்களை, முழுமையாகவோ, பகுதி யாகவோ, விற்பதற்கு ‘நிதி ஆயோக் அதிகாரிகள் பட்டியல் தயாரித்து இருப்பதாகவும், 2020 மார்ச் மாதத் திற்குள் இந்த சொத்துக்களை விற்று விடுவது என்றும் இலக்கு நிர்ண யித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்களில், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, அரசுக்கு தேவையான நிதியைத்திரட்டுவதற்கு தனியாக இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த அடிப்படையில், 2018 - 19 நிதியாண்டில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து, சுமார் 84 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டது. அதாவது உழைத்து வருமானம் ஈட்டாமல், முன்னோர் சேர்த்து வைத்திருந்த சொத்தை விற்று, பவிசு காட்டும் வேலையை மோடி அரசு செய்தது.
தற்போது 2019 - 2020 நிதியாண்டி லும் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தில் கீழ் இயங்கும் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை யிடம்தான் (Department of Invest ment and Public Asset Management (DIPAM) மத்திய அரசுக்குச் சொந்த மான சொத்துக்களை விற்று வருவாயைத் திரட்டித் தரும் பணி ஒப்படைக் கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், இந்த பொதுச் சொத்து மேலாண்மைத்துறையானது, ரூ. 90 ஆயிரம் கோடிக்கு எந்தெந்த சொத்துக்களை விற்கலாம் என்று பட்டியல் ஒன்றைப் போட்டுள்ளது.இந்த பட்டியலில், ஸ்கூட்டர்ஸ் இந்தியா (Scooters India) பாரத் பம்ப்ஸ் மற்றும் கம்ப்ரசர்ஸ் (¡õharat Pumps & Compressors) புராஜெக்ட் மற்றும் டெவலப்மெண்ட் இந்தியா (Project& Development India), இந்துஸ்தான் பிரிபாப் (Hindustan Prefab) இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் (Hindustan Newsprint), பிரிட்ஜ் & ரூப் கம்பெனிமற்றும் இந்துஸ்தான் புளூரோகார்பன்ஸ் (¡õridge & Roof Co. and Hindustan Fluorocarbon) போன்ற நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்களின் சொத்துக் களை விற்கத் தேவையான நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வருகிறார்கள்.இதனிடையே, நிதி ஆயோக்கும் தனியாக ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. நிதி ஆயோக் கொடுத்த பட்டியலில், என்டிபிசி என்ற மின்சார உற்பத்தி நிறுவனத்தின் பதர்பூர் மின் ஆலையை விற்பது, அதே என்டிபிசி-யின் 400 ஏக்கர் நிலத்தை விற்றுவிடுவது; செயில் நிறுவனத்தின் ப்ரவுன்ஃபீல்ட் திட்டத்தை விற்பது, சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சில திட்டங்களை விற்றுவிடுவது, என அந்த பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. 

இவையெல்லாம் ஒரு நிறு வனத்துக்குச் சொந்தமாக இருக்கும் ப்ராஜெக்ட் திட்டங்கள் மற்றும் சொத்துக்கள். ஆனால், இதையெல் லாம் தாண்டி அரசுக்குச் சொந்தமான 24 நிறுவனங்களை, முழுமையாக, அப்படியே விற்கவும் மோடி அரசு திட்டம் போட்டுள்ளது.இதில் ‘ஏர் இந்தியா’ தான் பட்டி யலில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி அமைச்சகத்தின் கீழ், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் அரசு சொத்துக்களை விற்க உருவாக்கப்படும் பேனல்களின் ஒப்புதல் கிடைத்த உடன் அடுத்த மார்ச் 2020-க்குள் ஒவ்வொரு சொத்தாக விற்க நிதி ஆயோக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.