சனா
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதம் தாங்கிய இந்த போராட்டக் குழுவிற்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வரும் நிலையில், ஹவுதி இன மக்களை ஒடுக்க ஏமன் அரசு அண்டை நாடான சவுதியுடன் இணைந்து போராட்டக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏமனின் வடகிழக்கு பகுதியான மாரீப் நகரின் அல்-மிலாவில் உள்ள ராணுவ குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 60 வீரர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையை யார் வீசியது என்று தெரியவில்லை. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பதால் ஏமன் அரசுப் படைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.