புதுதில்லி:
காஷ்மீர் எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.காஷ்மீர் ஹூரியத் தலைவர் அப்துல் கனிபாட் என்பவர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
காஷ்மீர், மாநிலமாக இருந்தபோது, 6 மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்துடன் 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது காஷ்மீர், இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையிலும், இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர்கின்றனர். அத்துடன் உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர்.காஷ்மீர் மாநிலம் என்ற ஒன்று தற்போது இல்லாத நிலையில், இது சட்டவிரோதமாகும். இவர்கள் சட்டப்படி தற்போது உறுப்பினர்கள் இல்லை. எனவே, உறுப்பினர்கள் அல்லாத இவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். அத்துடன் இவர்களுக்கு ஊதியம், சலுகைகளையும் வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.