tamilnadu

img

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

புதுதில்லி:
கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  2007 ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில்
முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.  பின்னர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், அவர் சிவகங்கை மக்களவை தொகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதனால் இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க் களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளது.