புதுதில்லி:
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஆன்லைன் வருமான வரித்தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயரும் என்று மோடி அரசு ஜம்பம் அடித்திருந்தது. ஆனால், அதில் கடந்த நிதியாண்டில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் வருமான வரித் தாக்கலுக்கான தளத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஆன்லைன் வருமான வரித் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை ‘கோடக் எகனாமிக்ஸ்’ ஆய்வு செய்துள்ளது.
அதில், ‘2018-19ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலமான வருமான வரித்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 68 லட்சம்’ என்றும், “இது முந்தைய ஆண்டில் ஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் 6 கோடியே 74 லட்சம் பேர் ஆன்லைனில் வருமான வரித்தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.