தேனி:
பிரதம மந்திரி கிசான் சம்மான்நிதித்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடிகாவல்துறை விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.
பெரியகுளம் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பசும்பொன் அதிபதி. விவசாயியான இவர் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில்இணைய 2018- ஆம் ஆண்டு தனதுஆதார் விபரம், நில உரிமை நகல்,வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டநகல்களை இணைத்து விண்ணப்பித்தார். இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையிலும் இவரது வங்கிக் கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படவில்லை. இந்தநிலையில் செப்.1-ஆம் தேதி அரசுஇ-சேவை மையத்தில் தனது ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்துள்ளார். அப்போது ஆதார், அலைபேசி எண், நில உரிமை நகல் உள் ளிட்ட விபரங்கள் அவரது பெயரில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. ஆனால் வங்கிக்கணக்கு எண் மட்டும் மாறியிருந்தது. தவிர அந்த வங்கிக் கணக்கில் ரூ.2ஆயிரம் வீதம் ஐந்து தவணைகளில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருந்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதை அறிந்த பசும்பொன் அதிபதி அதிர்ச்சியடைந் தார்.மேலும் பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி பகுதிகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேனி மாவட்டத்தில் கிசான் சம்மான் திட்டம் குறித்து சிபிசிஐடி காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளார்.