புதுதில்லி:
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர், இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவருக்கு எதிராக பாஜக-வைச் சேர்ந்த ராஜீவ் பாபர் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சசிதரூர் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சசிதரூருக்கு, நிபந்தனை முன்ஜாமின் வழங்கியுள்ளது.